பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...


நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.112 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
நகைச்சுவை, ஆக்ஷன், ஹாரர் கலந்த படமாக நேற்று (ஜன.9) உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியானது.
பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படம் உருவாகியுள்ளது.
ஹாரர் பேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஆந்திரம், தெலங்கானாவில் சுமார் ரூ. 49 கோடியும் கர்நாடகத்தில் ரூ.7 கோடியும் மற்ற இந்தியாவின் பல பாகங்களில் சேர்த்து ரூ.7 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.
இந்தியாவில் மட்டும் ரூ.67 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுக்க ஓர் நாளில் ரூ.112 கோடி வசூலித்தாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு வரை 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டிகளுக்கு அதிகமாக விற்பனையாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...