நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் வாரத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தினால் இந்தப் பட வசூல் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.
பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், ஹாரர் கலந்த படமாக தி ராஜா சாப் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளில் ரூ.112 கோடி வசூலிக்க, தற்போது முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு 4 நாள்களில் ரூ.190 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படத்திற்கான வரவேற்பினால் பிரபாஸ் பட வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
summary
The first-week box office collection details of actor Prabhas's film 'The Raja Saab' have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொடங்கியது பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!
இடைவேளை எடுங்கள் பிரபாஸ்... புலம்பும் ரசிகர்கள்!

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


