/

மீண்டும் இணையும் தனுஷ் - ஆனந்த் எல். ராய்?

தனுஷ், ஆனந்த் எல். ராய் குறித்து...

News image
தனுஷ் - ஆனந்த் எல். ராய்
Updated On :6 ஜனவரி 2026, 10:09 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது.

இதனால், தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் ரூ. 160 கோடி வரை வசூலித்து கடந்தாண்டின் வெற்றிப்படமானது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஞ்சனா, அட்ராங்கி ரே, தேரே இஷ்க் மே படங்களைத் தொடர்ந்து இக்கூட்டணி இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.