டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்..! மிருணாள் தாக்குர் புகழாரம்!

நடிகை மிருணாள் தாக்குர் நடிகர் தனுஷ் பற்றி பேசியிருப்பதாவது...

News image
தனுஷ், மிருணாள் தாக்குர்.- படங்கள்: இன்ஸ்டா / தனுஷ், மிருணாள் தாக்குர்.
Updated On :20 பிப்ரவரி 2026, 9:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை மிருணாள் தாக்குர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

காதலர் நாளில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக வதந்திகள் பரவிய நிலையில் தனுஷுடன் நடிக்க மிருணாள் தாக்குர் விருப்பம் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

பாலிவுட்டில் நடித்துவரும் தனுஷ் சில நிகழ்ச்சிகளில் மிருணாள் தாக்குரை சந்தித்தது ரசிகர்களிடையே பேசுபொருளானது.

தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்

இந்நிலையில், தனது ’தோ திவானே சேஹர் மெயின்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற மிருணாள் தாக்குர் பேசியிருப்பதாவது:

ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் படங்களைப் பார்த்தபிறகு நான் தனுஷின் மிக மிகப் பெரிய ரசிகையாக மாறினேன்.

அசுரன் படத்தினை பலமுறை பார்க்க முடியும். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவர் ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடனமாடுபவர், நடிகர், இயக்குநர் ஆகவும் இருக்கிறார்.

எனக்காக வந்தார்...

தனுஷ் சார் தேரே இஷ்க் மெயின் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். அவரிடம் எனது சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் திரையிடலுக்கு வர முடியுமா எனக் கேட்டேன். அவர் வருவாரென நான் நினைக்கவில்லை. அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

நிஜமாகவே அவரிடன் ஒருநாள் நடிக்க வேண்டுமென மிகவும் விரும்புகிறேன்.

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அடிப்படை ஆதராமற்ற வதந்தியாக முடிவடைந்துள்ளது.

மிருணாள் தாக்குர் நடித்துள்ள புதிய படம் இன்று (பிப்.20) திரையரங்குகளில் வெளியாகிறது.

summary

Dhanush is a university..! Praise for Mrinal Thakur amid Marriage rumours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.