/

காலம் மாறினாலும் காதல் மாறாது: மிருணாள் தாக்கூர்

நடிகை மிருணாள் தாக்கூர் காதல் குறித்து பேசியுள்ளார்...

News image
மிருணாள் தாக்கூர்
Updated On :4 பிப்ரவரி 2026, 11:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை மிருணாள் தாக்கூர் காதல் குறித்து பேசியுள்ளார்.

நடிகை மிருணாள் தாக்கூர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் பிப். 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் இது கிசுகிசுதான் என ரசிகர்களும் கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மிருணாள் தாக்கூர் காதல் குறித்து பேசியுள்ளார். அதில், “காதல் என்பது அழகான உணர்வு. அது எல்லாருக்கும் அமைய வேண்டும். அது ஒருவரை மேம்பட்ட நபராக மாற்றும் சக்தி கொண்டது. காதலில் இருப்பவர்கள் ஒருவருக்கு இன்னொருவர் கொடுப்பவராக இருக்க வேண்டும். அதில் ஆண் - பெண் பேதமில்லை.

மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர்

சில நேரங்களில் காதலை ஏற்றுக்கொள்வதிலும் அங்கீகரிப்பதிலும் சிரமம் இருக்கலாம். ஆனால், அதன் முழுமை ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. காதலுக்கான வரையறைகள் காலத்திற்கு ஏற்ப மாறினாலும், காதல் எப்போது மாறுவதில்லை. நீங்கள் ஒருவரைக் காதலித்தால் அவரிடம் முழுமையாக சரணடையுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.