/

வித்தியாசமான அனுபவத்திற்குத் தயாராகும் ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா நடித்த பகவந்த் கேசரியும் விஜய்யின் ஜன நாயகனும்...

News image
ஸ்ரீலீலா, விஜய்
Updated On :6 ஜனவரி 2026, 9:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஸ்ரீலீலாவுக்கு ஜன நாயகன் திரைப்படத்தால் வித்தியாசமான அனுபவம் ஏற்பட உள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரீலீலா பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த பராசக்தி பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதேநேரம், சுவாரஸ்யமாக இவர் நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்கான ஜன நாயகன் படம் ஒருநாள் முன்பாக ஜன. 9 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், தான் நடித்த திரைப்படத்தின் ரீமேக் படத்துடன் தன் புதிய திரைப்படமான பராசக்தி போட்டிக்கு வரவுள்ள அனுபவத்தை ஸ்ரீலீலா பெறப்போகிறார்.

அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.