/

2 ஆண்டுகளுக்குப் பிறகு... காந்தி டாக்ஸ் ரிலீஸ் தேதி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படம் குறித்து...

News image
காந்தி டாக்ஸ் படத்தின் போஸ்டர். - படம்: யூடியூப் / ஜீ ஸ்டூடியோஸ்.
Updated On :3 ஜனவரி 2026, 8:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அடங்கிய விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வரும் ஜன. 30ஆம் தேதி காந்தி நினைவு நாளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு சில மராத்தியப் படங்களை கிஷோர் இயக்கியுள்ளார். 

வசனங்களே இல்லாத சைலண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் நடித்துள்ளார்கள்.

ஜீ ஸ்டீடியோஸ், கையோரிஸ், பின்க்மூன் அன்ட் மூவிமில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வாகியது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

YouTube video thumbnail

summary

A video containing the release date of the film 'Gandhi Talks', starring Vijay Sethupathi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.