டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஓடிடியில் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் எப்போது?

விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் ஓடிடி வெளியீடு தொடர்பாக..

News image
காந்தி டாக்ஸ் படத்தின் போஸ்டர். - படம்: யூடியூப் / ஜீ ஸ்டூடியோஸ்.
Updated On :9 பிப்ரவரி 2026, 6:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.

இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வானது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜன. 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

வசனங்களே இல்லாத காட்சிகளாக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களை ரசிக்க வைத்தது.

ஜீ ஸ்டீடியோஸ், கையோரிஸ், பின்க்மூன் அன்ட் மூவிமில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இந்த நிலையில், காந்தி டாக்ஸ் திரைப்படம் வரும் பிப். 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information has emerged regarding the OTT release date of actor Vijay Sethupathi's film 'Gandhi Talks'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.