நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உடல்நிலையைக் குறித்து...

News image
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி - எக்ஸ்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல பாலிவுட் இயக்குநரும், இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியின் உடல்நிலைக்கு எந்தவொரு ஆபத்துமில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. கங்குபாய் கதியாவாடி, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மொழிகளைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.

இந்த நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 24) அவரது 63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

இதையடுத்து, அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வருத்தமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நலமாகவுள்ளதாகவும் சஞ்சய் லீலா பன்சாலியின் குடும்பத்தினர் புதன்கிழமையன்று விளக்கமளித்துள்ளனர்.

summary

Famous Bollywood director and music composer Sanjay Leela Bhansali's health is out of danger, his family has said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.