/

துரந்தரால் திட்டமிட்ட வெளியீட்டிலிருந்து விலகும் திரைப்படங்கள்!

மார்ச் வெளியீட்டிலிருந்து விலகும் திரைப்படங்கள்...

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 7:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

துரந்தர் திரைப்படத்தின் வெளியீட்டால் சில பெரிய பட்ஜெட் படங்கள் திட்டமிட்ட வெளியீட்டிலிருந்து தள்ளிச் செல்கின்றன.

ஹிந்தியில் மட்டுமே உருவானாலும் இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து மிரட்டியது துரந்தர். நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இப்படம் ஓடிடியில் வெளியாகியும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இதன், இரண்டாம் பாகம் பான் இந்திய வெளியீடாக உருவாகியுள்ளது.

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் (மார்ச் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

இரண்டு திரைப்படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ஏதேனும் ஒரு திரைப்படம் வெளியீட்டை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், இப்படங்களால் மார்ச்சில் வெளியாக இருந்த நடிகர் ராம் சரணின் பெத்தி, நானியின் பாரடைஸ், டகாய்ட் ஆகிய திரைப்படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில், ஏப்ரல் 20 ஆம் தேதி பெத்தியும் பாரடைஸ் திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.