டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

12.2.1976: த.நா. திட்டம் - சேலம் உருக்காலை, நெய்வேலி சுரங்க ஒதுக்கீடுகள் உயரலாம்

பார்லிமென்டில் த.நா. பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பது பற்றி...

News image
12.2.1976
Updated On :11 பிப்ரவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது டில்லி, பிப். 11 - தமிழ் நாட்டின் 1976-77 ஆம் ஆண்டு திட்டத்தை திட்டக் கமிஷனும், நிதி அமைச்சகமும், மறு பரிசீலனை செய்யுமென்று தெரிகிறது. இப் புது பரிசீலனையில் முதலிடங்களும், முதலீடுகளும் மாற்றியமைக்கப்படுவது சாத்தியமென்று தெரிகிறது.

அடுத்த ஆண்டுக்கான மத்திய திட்டத்தின் கீழ் சேலம் உருக்காலைக்கு அதிக ஒதுக்கீடு செய்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெய்வேலிக்கு இரண்டாவது சுரங்கம்

மற்றும் இதர மத்திய திட்டங்களும் துரிதப்படுத்தப்படும். நெய்வேலியில் இரண்டாவது பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் வெட்டும் திட்டமும் அதில் சேர்ந்ததே.

முன்பு உணவு, ரெவின்யூ மந்திரியாக இருந்த எஸ். மாதவனுடன் ஜனவரி (மாதம்) 16 (ஆம் தேதி)யன்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 1976-77 தமிழ்நாடு திட்டத்துக்கான ரூ. 177 கோடி முதலீட்டை திட்டக் கமிஷன் அங்கீகரித்தது. ...

... பார்லிமென்டில் த.நா. பட்ஜெட் வரும்

1976-77 தமிழ் நாடு பட்ஜெட்டும் லோக் சபையில் சமர்ப்பிக்கப்படும். ராஷ்டிரபதி ஆட்சி பிரகடனம் அங்கீகாரம் பெற்றதும் பட்ஜெட் வரும். லோக் சபை மார்ச் (மாதம்) 8 (ஆம் தேதி) கூடவிருக்கிறது. மார்ச் மாதம் 19 அல்லது 20 தமிழ் நாடு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படக்கூடும்.

சென்னை, பிப். 11 - தலைமைக் காரியாலயத்தில் உள்ள சில அரசாங்கக் காரியாலயங்களில் இருந்த அண்ணாதுரை படங்கள் அகற்றப்படவில்லை. ராஷ்டிரபதி படம் இருக்க வேண்டிய இடத்தில் அவை இருந்த அறைகளில், ராஷ்டிரபதி படங்கள் உரிய இடத்தில் வைக்கப்பட்டு அண்ணதுரை படங்கள் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி அறைகளிலிருந்து அவை அகற்றப்படவில்லை.

புதுடில்லி, பிப். 10 - வெப்ப மண்டல சீதோஷ்ண நிலைக் கழக டைரக்டர் டாக்டர் கே. சாஹா, இந்தியாவில் செயற்கை மழை சோதனைகளை நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதென்று எச்சரித்தார்.

டாக்டர் சாஹா மேலும் பேசுகையில், தரை மட்டத்திலிருந்து மேக மண்டலங்கள் மீது மழை தருவிக்கும் மருந்து பிரயோகிப்பது பயனற்றது என்று கூறினார். விமானங்களிலிருந்து மேகங்களில் மருந்து செலுத்தி மழை தருவிப்பதென்றால், அது சம்பந்தமான பௌதிக அமைப்புகளை மேற்கொண்டு ஆராய்வதும், பலன்களை மதிப்பிடுவதற்கு முன்னும் முற்போக்கான முறை அவசியமென்றும் கூறினார்.

முன்னாள் வானிலை அளவை, தகவல் நிலையங்கள் பிரதம டைரக்டர் சி. ராமசாமி 1960-ல் தமிழ்நாட்டில் நடந்த செயற்கை மழை சோதனைகளின்போது பெய்த மழை, இயற்கையாகப் பெய்த மழையேயாகுமென்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.