டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

15.2.1976: கார்டுதாரருக்கு மாதம் 30 கிலோ அரிசி

கார்டுதாரருக்கு மாதம் 30 கிலோ அரிசி அறிவிக்கப்பட்டது பற்றி...

News image
15.2.1976
Updated On :14 பிப்ரவரி 2026, 10:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, பிப், 13 - கார்டுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு இனி 30 கிலோ அரிசி குறைந்தபட்சம் கிடைக்கும்.

மாதம் ரூ. 500-ம் அதற்கு அதிகமாகவும் வருமானம் உள்ளவர்களின் கார்டுகளுக்கு கிலோ ரூ. 2-50 வீதம் 30 கிலோ பச்சரிசி சப்ளை செய்யப்படும். இதுவரை 20 கிலோ சப்ளை செய்யப்பட்டு வந்தது.

'சென்னை நகர், கோவை, குமரி ஜில்லாவில் எல்லைப் பகுதி ஆகியவற்றிலுள்ள கார்டுதாரர்களும், நீலகிரி ஜில்லாவிலுள்ள கார்டுதாரர்களும் தற்போதுள்ள அளவில் அல்லது 30 கிலோ - இதில் எது அதிகமோ அதனை பெறலாம்.

இந்த உத்தரவு நடப்பு மாதத்திலிருந்து அமலுக்கு வருகிறது.

ஹைதராபாத், பிப். 14 - இன்று அதிகாலையில் போங்கிர் ஸ்டேஷன் அருகில் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன. பிரயாணிகள் யாரும் காயமடையவில்லை. (ஹைதராபாத்திலிருந்து சுமார் 28 மைல் தொலைவில் உள்ள இடம் இது.)

"லூப்" லைனிலிருந்து, மெயின் லைனுக்கு ரயில் மாறுகையில், இந்த விபத்து நேரிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

முதலிருந்த 4 பெட்டிகளும் கடைசியிலிருந்த 3 பெட்டிகளும் தண்டவாளத்திலிருந்து இறங்கவில்லை. நடுவிலிருந்த 7 பெட்டிகள் தான் தடம் புரண்டன என்றும், அவற்றின் பெட்டிகள் தூள் தூளாகநொறுங்விட்டன. என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

முன் பகுதியில் இருந்த 4 பெட்டிகளை வேறு ஒரு இஞ்ஜின் இழுத்துக் கொண்டு காலை 6 மணிக்கு செகந்திராபாத் வந்து சேர்ந்தது. இதில் பிரயாணிகள் வந்தனர்.

விபத்து ஏற்பட்டபோது உயரே படுத்துக் கொண்டிருந்த சில பிரயாணிகள் கீழே விழுந்து விட்டனர். ஆனால் காயம் ஏற்படவில்லை.

summary

15.2.1976: 30 kg of rice per month for cardholders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.