

நடிகர் சசிகுமார் நடித்த பிரீடம் திரைப்பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ திரைப்படம் தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருந்தனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றுவரை வெளியீடு ஆகவில்லை.
தற்போது, சசிகுமார் நடித்த மை லார்ட் திரைப்படம் வருகிற பிப். 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் கவனிக்கப்பட்டால், மீண்டும் பிரீடம் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சசிகுமார் படத்தை வெளியிடும் சூர்யா!
மறுவெளியீடாகும் மின்னலே!
பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா?

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

