

ஆவேஷம் இரண்டாம் பாகம் உருவாகும் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டன.
இதன் இரண்டாம் பாகம் வருமா? வராதா? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்த நிலையில், ஆவேஷம் - 2 உருவாகும் என ஃபஹத் ஃபாசில் உறுதி செய்துள்ளார்.
தற்போது, ஜித்து மாதவன் நடிகர் சூர்யாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும் ஆவேஷம் - 2 பணிகளைத் துவங்குவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிராகன் - 2 அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!
தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!

த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

