டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

புதுப்புது அர்த்தங்கள் தொடருக்குப் பிறகு நடிகை பார்வதியுடன் மீண்டும் அபிஷேக் நடிப்பது குறித்து..

News image
இயக்குநர் திருமுருகன் உடன் நடிகர் அபிஷேக்- படம் - எக்ஸ்
Updated On :3 பிப்ரவரி 2026, 10:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோலங்கள் தொடருக்குப் பிறகு இயக்குநர் திருமுருகனுடன் நடிகர் அபிஷேக் மீண்டும் இணைந்துள்ளார்.

கோலங்கள் தொடரில் அபிஷேக்கின் பாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், எதிர்நீச்சலில் மீண்டும் திருமுருகனுடன் பணிபுரிகிறார்.

இதேபோன்று எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை பார்வதியுடன் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் அபிஷேக் நடித்திருந்தார். தற்போது மீண்டும் பார்வதியுடன் எதிர்நீச்சல் தொடரில் அபிஷேக் நடிக்கிறார்.

அபிஷேக் / பார்வதி

அபிஷேக் / பார்வதி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) தொடர் முன்னணி தொடர்களில் ஒன்றாக உள்ளது.

வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர், பல்வேறு திருப்பங்களைக் கொண்டுள்ளதால், மக்கள் விரும்பிப் பார்க்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது.

நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, கனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களின் புகுந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதையே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.

Story image

தற்போது ரெளடிகள் துரத்த நாயகி ஜனனி (பார்வதி) காட்டிற்குள் சென்று ஓடி ஒளிகிறார். அப்போது அவருக்கு காரில்மோதி விபத்து ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறார் கேப்டன் தேவசகாயம் (அபிஷேக்). ஜனனியின் பிரச்னைகளுக்கு உதவுவதாகவும் தேவசகாயம் கூறுகிறார். இவ்வாறு எதிர்நீச்சல் தொடரில் அபிஷேக்கின் அறிமுகம் அமைந்துள்ளது.

திருமுருகன் இயக்கிய கோலங்கள் தொடரின் மூலம் சின்ன திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அபிஷேக் பெற்றார். இதனைத் தொடர்ந்து, மலர்கள், செல்லமே, செம்பருத்தி, அனு பல்லவி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார்.

எதிர்நீச்சல் தொடரிலிருந்து...

எதிர்நீச்சல் தொடரிலிருந்து...

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் தேவயானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்தொடரில் நடிகை பார்வதி நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் திருமுருகன் இயக்கத்தில் மீண்டும் அபிஷேக் நடிக்கத்தொடங்கியுள்ளார். எதிர்நீச்சல் தொடரில் கேப்டன் தேவசகாயம் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.