டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கதாநாயகனாகும் நீ நான் காதல் சீரியல் நடிகர்!

நீ நான் காதல் தொடரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சங்கரேஷ், புதிய தொடரில் நடிக்கவுள்ளது குறித்து..

News image
சங்கரேஷ்- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிகர் சங்கரேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீ நான் காதல் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சங்கரேஷ்.

2023 முதல் 2025 வரை ஒளிபரப்பான இந்தத் தொடரின் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் வரவேற்பைப் பெற்ற சின்ன மருமகள் தொடரின் தெலுங்கு மொழி மறுஉருவாக்கத்தில் சங்கரேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது மீண்டும் தமிழில் புதிய தொடரில் சங்கரேஷ் நடிக்கவுள்ளார். இந்த புதிய தொடரிலும் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவரும் நாயகனாக சங்கரேஷ் மாறவுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இமைகள், தி ஹோரஸ் உள்ளிட்ட இணையத் தொடர்களில் சங்கரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.