டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி...

News image
ரஜினி, தூய்மைப் பணியாளார் பத்மா
Updated On :3 பிப்ரவரி 2026, 6:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி பரிசளித்து பாராட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகா் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் கண்ட தூய்மைப் பணியாளர் பத்மா, தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தாா்.

காவல் துறையினா் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் சுமாா் 45 பவுன் நகைகளை தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகாா் அளித்திருந்தது தெரிய வந்து அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதனால், சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பலரும் பாராட்டினர். முக்கியமாக, தமிழக முதல்வர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து ரூ. 1 லட்சத்தைப் பரிசாக வழங்கினார்.

Story image

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து, தங்கச் சங்கிலியைப் பரிசளித்து அவரது நேர்மையைப் பாராட்டியுள்ளார். ரஜினியின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.