8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சூரியின் மண்டாடி பட டீசர் வெளியீடு!

சூரி நடித்துள்ள மண்டாடி படத்தின் டீசர் இன்று வெளியானது.

சூரி

Published On :25 ஆகஸ்ட் 2026, 8:06 pm IST

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தில், சூரியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த கொட்டுக்காளி, கருடன், மாமன் ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, சூரி மீண்டும் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’மண்டாடி’. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், மண்டாடி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருகிற செப். 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

Teaser of the movie Mandaadi starring Soori released today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.