சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு.

இந்திய ரூபாய்

Published On :25 ஆகஸ்ட் 2026, 5:50 pm IST

மும்பை: உள்நாட்டுச் சந்தையில் ஏற்பட்ட சாதகமான போக்கும், டாலரின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றின் காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவடைந்தது.

வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால் டாலரில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பலவீனம், குறைந்த அளவுகளில் ரூபாயின் மதிப்பிற்கு ஆதரவளிக்கக்கூடும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு பெரும்பாலும் ரூ. 95.50 முதல் ரூ. 96.00 என்ற வரம்பிற்குள்ளேயே நீடித்தது. கச்சா எண்ணெய் விலை மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீடு ஆகியவை குறுகிய காலத்தில் இதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகத் தொடரும்.

அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.74 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 95.40 ஐ தொட்டது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையை விட 24 காசுகள் உயர்ந்து, ரூ. 95.46 ஆக நிறைவடைந்தது.

நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ. 95.70 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee pared initial losses and settled for the day higher by 24 paise at 95.46 against the dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.