
மயில்வீரா! சர்தார் - 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு!
சர்தார் - 2 படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ இன்று வெளியானது.

கார்த்தி
சர்தார் - 2 படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ இன்று வெளியானது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள சர்தார் 2 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்க் கடவுள் முருகனை மையப்படுத்தி இப்பாடல் உருவாகியுள்ளது.
வாஹீசன் ராசையா எழுதியுள்ள இப்பாடலை முகேஷ், ஆஃப்ரோ இணைந்து பாடியுள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் 100-வது திரைப்படம் என்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
Mayilveera first song from the movie Sardar 2 was released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







