ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இருளன் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம்!

படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்...

நடிகர் அருண் விஜய்

Published On :18 ஆகஸ்ட் 2026, 5:56 pm IST

நடிகர் அருண் விஜய் இருளன் படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ’இருளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முத்தைய்யாவின் முந்தைய படங்களைப் போன்றே இப்படமும் ஆக்‌ஷன் கலந்த உணர்வுகளைப் பேசும் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

இறுதியாக, முத்தையா இயக்கிய ராம்போ திரைப்படமும் அருண் விஜய் நடித்த ரெட்ட தல திரைப்படமும் தோல்விப்படமானதால் இருவரும் வெற்றி பெற வேண்டும் என நம்பிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்குப் பின்பக்க தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக்காட்சியில் இது ஏற்பட்டிருப்பதால் இதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வரும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய், “இருளன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்தக் காயங்களால் வழக்கமான உடற்பயிற்சிகளில் தடை ஏற்படுவது வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் விளையாட்டில் சகஜம்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Arun Vijay was injured during the shooting of the film Irulan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.