ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சமா? அருண் ராஜ் எச்சரிக்கை!

எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் அருண் ராஜ் பேசியது குறித்து...

செய்தியாளர் சந்திப்பில் அருண் ராஜ் / மருத்துவமனையில் ஆய்வின்போது முதல்வர் சி. ஜோசப் விஜய்

Published On :8 ஜூலை 2026, 6:07 pm IST

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம் பெறுவது மருத்துவமனைகளில் புழக்கத்தில் உள்ளதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவமனை குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் வந்த புகாரைத் தொடர்ந்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மருத்துவமனையில் கூடுதல் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என முதல்வரிடம், மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுடம் அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:

''100 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவமனையில், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளத்தில் புகார் வந்த உடனேயே, இணை இயக்குநருடன் தொடர்புகொண்டு விசாரித்தோம். முதல்வர் விஜய்யும் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட பணம் வாங்குவது மருத்துவமனையில் புழக்கத்தில் உள்ளது. அப்படி செய்பவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம்.

அரசு மருத்துவமனைக்கு ஏழை மக்கள்தான் வருகிறார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது. யாராவது மருத்துவமனையில் லஞ்சம் வாங்கினால் 104 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

எந்த மருத்துவமனையில் இருந்து யார் மீது புகார் அளித்தாலும் உறுதி செய்யப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

காப்பீடு திட்டங்கள் இருந்தால் மட்டுமே மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. காப்பீடு அட்டை இல்லை என்றாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவர்கள் உரிமை'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Bribe demanded to show the newborn to the family! Minister Arun Raj issues a warning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.