ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்..! இருளன் படத்தின் போஸ்டர்!

நடிகர் அருண் விஜய்யின் இருளன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் விடியோ குறித்து...

Poster of the movie Irulan

இருளன் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / முத்தையா.

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:57 pm IST

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள ’இருளன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது.

குட்டி புலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. கொம்பன், மருது என வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக இவர் இயக்கிய ராம்போ நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தில் நாயகனாக அருள்நிதி நடித்திருந்தார். அடுத்ததாக இவர் இயக்கிய சுள்ளான் சேது இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஷண்முக பாண்டியன் மற்றும் நேதாஜி புரடக்‌ஷன்ஸ் இணைந்து இருளன் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக அருண் விஜய் ரெட்ட தல படத்தில் நடித்திருந்தார்.

Summary

Arun Vijay in a film directed by Muthaiah..! Poster of the movie 'Irulan'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.