ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாய் அபயங்கரின் 6-வது ஆல்பம் பாடல் பெயர் இதுதான்!

சாய் அபயங்கர் தன் ஆறாவது ஆல்பத்தின் பெயரை அறிவித்துள்ளார்..

சாய் அபயங்கர்

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:50 pm IST

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் அவரின் புதிய ஆல்பம் உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சில மாதங்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபில் 28 கோடி பார்வைகளைக் கடந்தது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

இந்த நிலையில், தன்னுடைய 6-வது ஆல்பம் பாடலுக்கு சாய், ‘ரதிமா’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இப்பாடல் இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகைகளைத் தன் ஆல்பங்களில் ஆட வைக்கும் சாய் அபயங்கர் இம்முறை யாருடன் ஆட உள்ளார் என ரசிகர்களிடம் பெரிய ஊகங்களும் எழுந்துள்ளன.

His new album has been created with music composed by Sai Abhyankar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.