ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சனந்த் நடித்த ஹார்ட்டின் படத்தின் ஓடிடி தேதி!

ஹார்ட்டின் படம் ஓடிடியில் வெளியிடவுள்ள்ளது பற்றி...

Heartin

ஹார்ட்டின் போஸ்டர் - படம் - எக்ஸ்

Published On :10 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

ஹார்ட்டின் படம் வரும் ஆக. 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடித்த படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இதன் கதைக்களம் முக்கோணக் காதல் கதையாக அமைந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், வரும் ஆக. 14 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Summary

Heartin movie is set to be released on OTT on August 14.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.