ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் காண வேண்டிய காமெடி திரைப்படங்கள்!

ஓடிடியில் காண வேண்டிய நகைச்சுவை படங்கள் குறித்து....

comedy movies

ஓடிடியில் காண வேண்டிய காமெடி திரைப்படங்கள்! - படம்: எக்ஸ்

Published On :21 ஜூலை 2026, 5:22 pm IST

ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கும் தமிழ், மலையாள காமெடி திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1ரோமாஞ்சம்

Listicle image

சௌபின் ஷாகிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மலையாள மொழித் திரைப்படம் ரோமாஞ்சம்.

ஜித்து மாதவன் இயக்கிய இந்தப் படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.

2தாய் கிழவி

Listicle image

நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் கண்டு களிக்கலாம்.

மேலும் இந்தப் படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.

3மிடில் கிளாஸ்

Listicle image

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை பாணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4வாழ - 2

Listicle image

பள்ளிகால கதையாக உருவான வாழ - 2 திரைப்படம், பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. வசூலாகவும் ரூ. 110 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

5கெணத்த காணோம்

Listicle image

கெணத்த காணோம் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

6குரங்கு பெடல்

Listicle image

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் குரங்கு பெடல். இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், விஆர் ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கனேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். குரங்கு பெடல் திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

7கான்ஜூரிங் கண்ணப்பன்

Listicle image

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய  திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.

இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

8ஹவுஸ் மேட்ஸ்

Listicle image

ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

9பூக்கி 

Listicle image

கணேஷ் சந்திரா இயக்கிய பூக்கி திரைப்படத்தில், நடிகர் அஜய் திஷான், பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை நகைச்சுவையுடன் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

பூக்கி திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

10பரிமளா அண்ட் கோ

Listicle image

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பரிமளா அண்ட் கோ படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், கடந்த வாரம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Summary

Let us take a look at the Tamil and Malayalam comedy movies available on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.