ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஆக. 21 - 27)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

this week ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Published On :20 ஆகஸ்ட் 2026, 8:08 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1ஜன நாயகன்

Listicle image

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஜன நாயகன்.

பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(ஆக. 21) வெளியாகிறது.

2சென்னை லவ் ஸ்டோரி

Listicle image

சென்னை லவ் ஸ்டோரி படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

3ஸ்ரீனிவாச மங்காபுரம்

Listicle image

அஜய் பூபதி இயக்கத்தில் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி மற்றும் ராஷா ததானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஸ்ரீனிவாச மங்காபுரம்.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

4மிஸ்டர் மிடில் கிளாஸ்

Listicle image

ஜி. நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த், லயா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் மிடில் கிளாஸ். மேலும் இந்தப் படத்தில், ராஜேந்திர பிரசாத், ரகு பாபு, வெண்ணெலா கிஷோர், பிருத்விராஜ், சுனில், நாகேஸ்வர் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

5பியார் பிரேமா கல்யாணம்

Listicle image

’பியார் பிரேமா கல்யாணம்’ எனும் புதிய படத்தை, இளன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சான்வி மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

6டார்க்

Listicle image

கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்திக், கே. பாக்யராஜ், அஞ்சனா நேத்ரன், நட்டி சுப்ரமணியம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டார்க்.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

7கடந்த வார ஓடிடி(ஹார்ட்டின்)

Listicle image

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த் நாயகனாக நடித்த படம் ஹார்ட்டின். இதில், மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தளங்களில் காணக் கிடைக்கிறது.

8காட்டாளன்

Listicle image

நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன் நடிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் காட்டாளன்.

யானை தந்த வேட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

9காக்டைல்- 2

Listicle image

நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ள காக்டைல்- 2 என்ற புதிய படத்தில் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

லுவ் ரஞ்சன், தருண் ஜெயின் எழுதி, ஹோமி அடஜானியா இயக்கிய காக்டைல்- 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

10பிரேம தேசம்

Listicle image

ஸ்ரீகாந்த் சித்தம் இயக்கத்தில் உருவான பிரேம தேசம் திரைப்படத்தில் திரிகன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஈடிவி வின் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

11மிஸ்டர் வொர்க் பிரம் ஹோம் (mr. work from home)

Listicle image


மதுதீப் செலிகானி இயக்கத்தில் திரிகன் மற்றும் பாயல் ராதாகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மிஸ்டர் வொர்க் பிரம் ஹோம்.

காதல் மற்றும் கிராமியப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

12அச்யுத அவதாரம்

Listicle image

கலாசாரப் பின்னணியைக் கொண்ட பெண்ணின் குடும்பம், இணைய மோசடியால் அனைத்தையும் இழக்கிறது. இதிலிருந்து இந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை.

புனித் இயக்கத்தில், மாளவிகா நந்தன், சீமா ஜி நாயர் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Summary

Let take a look at which movies and web series are set to release on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.