ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தமிழக முதல்வர் விஜய் நாயகனாக நடித்துள்ள “ஜன நாயகன்” படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

cm vijay's jana nayagan

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 6:38 pm IST

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் நாயகனாக நடித்து வெளியான “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நாயகனாக நடித்து உருவான அவரது கடைசி படம் “ஜன நாயகன்”. இப்படம், கடந்த ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான ஜனநாயகன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வெளியீட்டை மாநிலம் முழுவதும் முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினர்.

அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் நடிகர்கள் பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் “ஜனநாயகன்” படம் வரும் ஆக. 21 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என இன்று (ஆக. 19) அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Jananayagan, starring TN CM Joseph Vijay in the lead role, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.