ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரஷ்மிகாவின் காக்டைல் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

காக்டைல் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

A scene from the movie *Cocktail 2*.

காக்டைல் - 2 படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / மேடாக் ஃபிலிம்ஸ்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 6:19 pm IST

காக்டைல் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ள ’காக்டைல்- 2’ என்ற புதிய படத்தில் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

லுவ் ரஞ்சன், தருண் ஜெயின் எழுதி, ஹோமி அடஜானியா இயக்கிய காக்டைல்- 2 திரைப்படம், கடந்த ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேடாக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பிரீதம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகளவில் ரூ. 166.34 கோடி வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கோணக் காதல் கதையான காக்டைல் - 2 திரைப்படம், நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காக்டைல் - 2 திரைப்படம் வரும் ஆக. 14 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the movie Cocktail 2 has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.