ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள் காவலன்..! காவலதிகாரியாக நடித்துள்ள மணிகண்டனின் புதிய படம்!

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் குறித்து...

Poster of the movie *Makkal Kavalan*.

மக்கள் காவலன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / நீலம் புரடக்‌ஷன்ஸ்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 7:32 pm IST

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ’மக்கள் காவலன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் காவலதிகாரியாக நடித்துள்ளார்.

குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மணிகண்டன் லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து அசத்தினார்.

தற்போது, அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாயகி யார் என்பது குறித்து இன்னும் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நீலம் புரடக்‌ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு சின்னம். ஒரு மனிதன். அதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

Makkal Kaavalan..! Poster for Manikandan's new film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.