ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் குறித்து...

Poster of the new movie starring Manikandan.

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பா. இரஞ்சித்.

Published On :4 ஆகஸ்ட் 2026, 7:58 pm IST

நீலம் தயாரிப்பில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மணிகண்டன் லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து அசத்தினார்.

பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மணிகண்டன் தற்போது முழு நேர நடிகராக நடித்து வந்தார். திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்கொண்ட மணிகண்டன் விக்ரம் வேதா படத்தில் வசனம் எழுதி கவனம் ஈர்த்தார்.

நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தினையும் இயக்கியுள்ளார். குடும்பஸ்தன் வெற்றிக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பார் என்ற தேடுதல் நீண்ட நாள்களாக சென்றுகொண்டிருந்தன.

அடுத்ததாக, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை (ஆக.5) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், “பின்வாங்காத சாதாரண மனிதனே மிகப்பெரிய கதாநாயகன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Actor Manikandan's Next movie update Produced by Pa Ranjith & Birla Studios

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.