ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதிய மெல்லிசை... விரைவில் மண்டாடி படத்தின் இரண்டாவது பாடல்!

நடிகர் சூரி நடித்துள்ள மண்டாடி படத்தின் இரண்டாவது பாடல் குறித்து...

 Mandaad Movie poster

மண்டாடி படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / ஆக்டர் சூரி.

Published On :11 ஆகஸ்ட் 2026, 6:27 pm IST

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மண்டாடி படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து விடுதலை எனும் படத்தின் மூலமாக நாயகனாக மாறியுள்ள சூரி தற்போது மண்டாடி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். நாகைப் பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் இருந்து ’மண்டாடி மண்டாடி’ எனும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீல்ஸ் வெளியாகியிருப்பதாக சூரி பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மெலோடியாக (மெல்லிசை) உருவாகியுள்ள இரண்டாவது பாடல் தேதி குறிப்பிடாமல் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The second song from the movie Mandaadi is coming soon!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.