நடிகர் தனுஷின் “கர” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா வரும் ஏப். 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொழில் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கர”. எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் இப்படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், 90-களில் நடைபெறும் வங்கிக் கொள்ளையைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இத்துடன், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கர திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) சென்னை ஜவஹர்லால் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள “கர” படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Summary
the pre-release event for actor Dhanush's film “Kara” will be held on April 19th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
கர டிரைலர் அறிவிப்பு!
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
கர படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


