நடிகர் தனுஷ் கர திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “இப்படத்தின் கதையை எழுத 8 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். முழுமையாக எழுதி முடித்துவிட்டே தயாரிப்பு நிறுவனத்திடம் செல்ல வேண்டும் என்பதுதான் என் பாணி. முன்பணம் வாங்கியபின் அவரசமாக கதையை எழுதுவது துப்பாக்கியைத் தலையில் வைத்து எழுதச் சொல்வது மாதிரி.
இக்கதையை முடித்தபின் நடிகர் தனுஷிடம் சொன்னபோதே அவருக்குப் பிடித்துவிட்டது. உடனே, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. நான் அவரிடம் ஏதாவது நாயக காட்சிகளைச் சேர்க்க வேண்டுமா? எனக் கேட்டேன். அதற்கு அவர், ’இக்கதையிலேயே நாயகத்தன்மை இருக்கிறது. இதுவே போதும்’ என்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.
There is heroism inherent in the kara story itself, says Dhanush.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
கர டிரைலர் அறிவிப்பு!

கர படத்தில் கருணாஸ், சுராஜ் கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


