தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டே!

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது...

News image

ஜன நாயகன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பூஜா ஹெக்டே.

Updated On :11 ஏப்ரல் 2026, 3:09 pm IST

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து, அந்தப் படத்தில் நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது படம் இணையத்தில் கசிந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படம் குறித்து பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது:

என் அருமையான ரசிகர்களே, ஒரு படம் என்பது கணக்கில்லாத மணி நேரங்களின் உழைப்பு, ஆக்கப்பூர்வமான அபாயங்கள், தனிப்பட்ட தியாகங்களை படக்குழு ஒவ்வொரு நாளும் செய்து உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதன் கூட்டு முயற்சியினால் உருவாகுவது.

இணையத்தில் கசிந்த எங்கள் படத்தினால் மனம் உடைந்துவிட்டோம். இது எனக்கு மட்டுமல்ல, இதில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் இருக்கிறது.

இணையத்தில் கசிவதையும் அதை சட்டத்துக்குப் புறம்பாக பகிர்வதையும் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. அதன் எண்ணிக்கையைப் பொறுத்தல்ல; ஆனால், அந்தப் படத்தில் வேலை செய்ய ஒவ்வொரு கலைஞர்களின் மரியாதையையும் எடுத்துக்கொள்கிறது.

இதுமட்டுமில்லாமல், நமது விஜய் சாரின் கடைசி படத்தை எல்லாரும் சேர்ந்து கொண்டாட தகுதி இல்லையா? கடைசியாக ஒரு முறை, சரியான முறையில் திரையரங்கில் பார்க்க வேண்டும். அதனால், காத்திருந்து சரியான முறையில் திரையரங்கில் பாருங்கள்.

திருட்டுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். அப்படி இருந்தால்தான் சினிமாவும் கலையும் வாழ முடியும். கலை, கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை நேசியுங்கள். இப்படிக்கு பூஜா ஹெக்டே எனக் கூறியுள்ளார்.

Summary

Seeing our film leaked online is disheartening says Pooja Hegde

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.