மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து கமல் கூறியிருப்பதாவது...

News image

ஜன நாயகன் போஸ்டர், கமல். - படங்கள்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ், கமல்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:58 am

நடிகரும் எம்பியுமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது விபத்து அல்ல; அது நிர்வாகத்தின் தோல்வி” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்த விவாகரத்தில் திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து நடிகரும் எம்பியுமான கமல் ஹாசன் கூறியிருப்பதாவது:

ஜன நாயகன் கசிந்தது விபத்து அல்ல; அது நிர்வாகத்தின் தோல்வி. சரியான நேரத்தில் தணிக்கை முடிந்திருந்தால், நாம் இங்கிருந்திருக்க மாட்டோம்.  எதிர்பார்த்ததை விட மிக அதிகமான தாமதம் தணிக்கைச் சான்றிதழில் உருவானதால், திருட்டு வழிவகுத்தது.

சட்டப்பூர்வமான ஒன்றைச் செய்வதைத் தவிர்க்கும்போது, புறம்பானவர்கள் அதை எடுத்துக்கொள்கிறார்கள். இந்தத் திருட்டு, அரசியலைத் தாண்டியது; இது கலை மீதும் கலைஞர்கள் மீதான தாக்குதல்.

100க்கும் மேற்பட்ட, கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்களின் முதலீடு, வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமாவை நேசிப்பவர்களுக்கும் இது அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.

நிர்வாகம் தோல்வியுற்றால் படைப்பாளரை யார் காப்பாற்றுவது? நமக்கு பொறுப்பாளர்கள் தேவை. விரைவான தணிக்கைச் சான்றிதழ் வேண்டும், கடுமையான தண்டனை, உடனடியாக திருட்டை தடுக்க வேண்டும். உண்மையான சினிமா விரும்பிகள் ஒன்றிணைந்து, திரையரங்கில் மட்டுமே படத்தைப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். முன்னதாக எனக்கு ஆதரவளித்தது போல இந்த விஷயத்திலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Summary

The leak of Jana nayagan is not an accident - it is the result of systemic failure says Kamal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.