நடிகை கிருத்தி ஷெட்டி ஏஐ தொழில்நுட்பம் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டி, “சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் எனக் கண்டறிய முடியாத அளவுக்கு ஏஐயின் வளர்ச்சி கவலையளிக்கிறது. என்னுடன், ஆண் ஒருவர் நெருக்கமாக இருப்பதைப் போன்ற போலி ஏஐ புகைப்படத்தைக் கண்ட என் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகினார். பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? இதை எப்படி கட்டுப்படுத்துவது?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Summary
actor kriti shetty shares her thoughts on ai and fake images
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிகுந்த உணவுக் கட்டுப்பாட்டைப் பின் தொடர்ந்தேன்: கீர்த்தி சனோன்

முக்கோணக் காதல்? காக்டைல் - 2 பட டிரைலர்!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

தமிழில் வெற்றி பெறாத கிருத்தி ஷெட்டி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



