நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அரசன் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசன் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது பற்றி...

News image
Updated On :25 நவம்பர் 2025, 3:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகவுள்ளது.

இதில், நடிகர் சிம்பரசன் நாயகனாகவும் வடசென்னையில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி புகைப்படம் இடம்பெற்ற அறிவிப்பு போஸ்டரை வெளியிட்ட அவர், ”மனிதம் இணைகிறது, மகத்துவம் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்புவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

summary

Vijay Sethupathi in the movie simbu's Arasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.