காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ரீனாவைக் காப்பாற்றினாரா விஜய்? ஹார்ட் பீட் - 2 தொடர் நிறைவு!

ஹார்ட் பீட் - 2 தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

News image
ஹார்ட் பீட் - 2 தொடர் - படம்: எக்ஸ்
Updated On :6 நவம்பர் 2025, 8:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் - 2 இணையத் தொடர் 100 எபிசோடுகளுடன் இன்று(நவ. 6)நிறைவடைந்துள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வந்த இணையத் தொடர் ஹார்ட் பீட்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.

இந்தத் தொடரில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இத்தொடரின் கதையின்படி அனுமோளின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

இதனிடையே, திடீர் திருப்பமாக ரீனாவின் தந்தை கார்த்திக்(விஜய்) கதைக்குள் வருகிறார். இதனால் ரதி மற்றும் விஜய்யின் கடந்த கால வாழ்க்கையின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முன்னதாக, ”விஜய்தான் உன்னுடைய தந்தை” என ரதி, ரீனாவிடம் கூறிவிடுகிறார். ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய விஜய்தான் சரியான தேர்வு என அனைவரும் கூறும்போது, விஜய் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மருத்துவராக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்தச் சூழலில்தான் ரீனாதான் தனது மகள் என்ற உண்மை, விஜய்யிக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் விஜய் தனது மகளான ரீனாவைக் காப்ப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் ரீனாவைக் காப்பாற்றி விடுகிறார்.

ரீனாவுக்கு சுயநினைவு திரும்பியதும் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ரீனாவும் தனது தந்தையான விஜய்யை முதல்முறையாக அப்பா என்று அழைத்து பெருமிதம் கொள்கிறார்.

இந்தச் சூழலில்தான், விஜய், ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்தது காவல் துறையினருக்கு தெரியவர, காவல் துறையினர் விஜய்யை கைது செய்கிறது. இதோடு ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நிறைவு பெறுகிறது.

summary

Heartbeat - Season 2 Completed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.