/

மீனா நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மீனா நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர் வெளியானது.

News image
ரோஸ்லின் இணையத்தொடர்- படம்: ஜியோ ஹாட்ஸ்டார்
Updated On :14 பிப்ரவரி 2026, 9:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மீனா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடருக்கு ரோஸ்லின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் பிப். 27 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

YouTube video thumbnail

இயக்குநர் ஜித்து ஜோசப் ரோஸ்லின் இணையத் தொடரின் ஷோ-ரன்னர்(show runner) ஆக இருக்கிறார். திரில்லர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தொடரில், சஞ்சனா திபு, வினீத், ஹக்கீம் ஷா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் விநாயக் சசிகுமார் திரைக்கதையில் உருவாகியுள்ள ரோஸ்லின் இணையத் தொடரை மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிப். 27 ஆம் தேதி ரோஸ்லின் தொடர் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.