தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விஜய் ஆண்டனி - 12 படத்தின் அப்டேட்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 12-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 12:35 pm

DIN

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 12-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் விஜய் ஆண்டனி. முதல் படமான, ‘நான்’ படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை அடைந்தார்.

சில படங்கள் தோல்வியடைந்தாலும் விஜய் ஆண்டனிக்கான மார்க்கெட் குறையவில்லை. எப்போதும், கைவசம் சில படங்களை வைத்திருப்பார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதற்கிடையே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Story image

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் 12-வது படத்தின் அறிவிப்பு நாளை (அக்.16) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படத்தை அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.