தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வைரலாகும் கோட் படத்தின் புதிய போஸ்டர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 2:24 pm

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் கோட் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காரணம், இதுவரை கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே பெரிதாக ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.