டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஓடிடியில் 1 கோடி நிமிடங்கள்! பராசக்தி படத்தின் புதிய சாதனை!

பராசக்தி படத்தின் புதிய சாதனை குறித்து...

News image
பராசக்தி போஸ்டர்.- படம்: X
Updated On :10 பிப்ரவரி 2026, 9:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் குறைந்த நேரத்தில் 1 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

Story image

ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த பராசக்தி திரைப்படம், கடந்த பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், பராசக்தி படம் ஓடிடியில் வெளியாகி குறைந்த நேரத்திலேயே 1 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை பராசக்தி படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

summary

Sivakarthikeyan's film Parasakthi has set a new record by crossing 10 million views in a short time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.