

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1தி ராஜா சாப்

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தி ராஜா சாப்.
இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நாளை(பிப். 6) வெளியாகிறது.
2பராசக்தி

சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பராசக்தி திரைப்படம் வரும் பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3நாரி நாரி நடும முராரி

காதல் கலந்த நகைச்சுவை பாணியில் வெளியான திரைப்படம் நாரி நாரி நடும முராரி. இப்படத்தில் ஷர்வானந்த், சாக்ஷி வைத்யா, சம்யுக்தா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை காணலாம்.
4நீலகண்டா

நாயகனாக மகேந்திரனும், வில்லனாக ராம்கியும் நடித்துள்ள தெலுங்கு மொழிப்படம் நீலகண்டா.
கிராமப்புறப் பின்னணியில் உருவான திரைப்படம், நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
5படையாண்ட மாவீரா

இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'படையாண்ட மாவீரா'.
சமுத்திரக்கனி, பூஜிதா, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
6கடந்த வார ஓடிடி (துரந்தர்)

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் துரந்தர் திரைப்படம் வெளியாகி இந்தியளவில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1300 கோடிகளைத் தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
7வா வாத்தியார்

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
வா வாத்தியார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
8சர்வம் மாயா

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான சர்வம் மாயா திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடித்துள்ளனர்.
9பதங்

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட தெலுங்கு மொழிப்படம் பதங் (Patang). இந்தத் திரைப்படம் பட்டம் விடும் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
10சாம்பியன்

இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கத்தில் அனஸ்வரா ராஜன், ரோஷன் மேகா, முரளி சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சாம்பியன்.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணலாம்.
11தல்தல்

பூமி பெட்னெகர் திரில்லர் பாணியில் நடித்துள்ள இணையத் தொடர் தல்தல்.
தொடர் கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் பெண் காவல் துறை அதிகாரியை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
summary
Let's see which films are being released on OTT platforms this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடைய செய்திகள்
டிரெண்டிங்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


