கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நா ரெடி பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ! 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடிகர் விஜய்யின் லியோ பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:42 am

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். 

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் துள்ளல் இசைப் பாடலாக உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். வெளியாகி பல நாள்கள் ஆகியும் இந்தப் பாடலின் வைஃப் ரசிகர்களிடம் இருந்து அகலவில்லை. 

இந்தப் பாடல் யூடியூபில் 74 மில்லியனை (7.4 கோடி ) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமிலும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நா ரெடி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.