நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அனிருத்தின் 25வது படம்: கொண்டாடும் ரசிகர்கள்

அனிருத்தின் 25வது படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகெங்கிலும் ஹிட்டாகின. 

தொடர்ந்து அவர் இசையமைக்கும் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. விரைவிலேயே தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகினார். அனிருத் பாடல் என்றாலே ஹிட் தான் என அவரது இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட்டாகி வருகின்றன. 

Story image

இந்த நிலையில் அறிமுகமான 10 வருடங்களில் 25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தல் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அவரது 25வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.