இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விஜய்யிடம் கற்றுக்கொண்டதை தற்போதுவரை கடைப்பிடிக்கிறேன்: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொண்டதை இப்பொழுதுவரை கடைப்பிடிப்பதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தான் பிரியங்கா சோப்ரா முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஹிந்திப் படங்கள், ஆங்கில படங்கள் என கலக்கிக்கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், ''நான் துவக்கத்தில் தமிழன் என்ற தமிழ் படம், ஹிந்தியில் அண்டாஸ், மற்றும் தி ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்தேன். 

முதன்முறையாக நான் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றபோது உடை உடுத்துவதும், மேக்கப் போடுவதும் தான் நடிப்பு என்று நினைத்திருந்தேன். தமிழன் படத்தில் நடித்தபோது எனக்கு தமிழ் தெரியாததால் நடிப்பதற்கு மிகக் கடினமாக இருந்தது. யாராவது வசனங்களை சொல்ல நான் மனப்பாடம் செய்துகொண்டு பேசுவேன். அப்போது என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்ப்பேன். 

நடிகர் விஜய் என் திரையுலக வாழ்க்கையின் துவக்க காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். அவர் படப்பிடிப்புத் தளத்தில் தன்னடக்கத்துடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டால் திரும்பி செல்ல மாட்டார்.

அதனை நான் தற்போதுவரை கடைப்பிடிக்கிறேன். நான் எப்பொழுதாவது தான் காட்சிகள் படமாகும் இடைவேளையில் எனது அறைக்கு செல்வேன். மற்றபடி எப்பொழுதும் படப்பிடிப்புத்தளத்தில்தான் இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.