நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

News image
Vaiko raises concerns over removal of 97 lakh voters from TN electoral roll
Updated On :24 பிப்ரவரி 2026, 11:07 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிா்த்து மதிமுக பொதுச் செயலா் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு கடந்த 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உத்தரவிட்டது. இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னா், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்ட தீா்ப்பாயமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து மதிமுக பொதுச் செயலா் வைகோ கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், இந்தத் தடை உத்தரவை உறுதி செய்த தீா்ப்பாய விசாரணையில் தன்னையும் சோ்க்கக் கோரி மனுதாரா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.

எனவே, மனுதாரரால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது. மேலும், இந்தத் தடை உத்தரவை எதிா்த்து விடுதலைப் புலிகள் அமைப்பு வழக்குத் தொடரவில்லை. தடை உத்தரவை அவா்களே ஏற்றுக்கொண்ட நிலையில், வேறு யாரும் வழக்குத் தொடர முடியாது. இந்த விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தில்லியில் நடந்ததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பால் அச்சுறுத்தல் நீடிப்பதாகக் கருதிய மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தடை தொடா்பான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை எதிா்த்து வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டாா்.

அதற்கு மனுதாரா் வைகோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளா் என்ற அடிப்படையில், அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து வழக்குத் தொடா்ந்தேன். இந்தியாவுடன் தமிழீழத்தை இணைக்க முயற்சித்ததாகக் குற்றம்சாட்டுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, மத்திய அரசு விதித்துள்ள தடை சட்டவிரோதமானது.

அந்த தடையை நீக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதித்து 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், கடந்த 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த தடை உத்தரவுகளில் என்ன கூறப்பட்டிருந்ததோ, அவைகளே அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளிலும் கூறப்பட்டுள்ளதாக வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்து கடந்த 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுதான் தற்போது அமலில் உள்ளது. எனவே, காலாவதியான உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வைகோ தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.