எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தவெக பொதுச் செயலருக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக பொதுச் செயலா் ஆனந்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா் - ANI
Updated On :29 ஜனவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக பொதுச் செயலா் ஆனந்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தவெக பொதுச் செயலா் ஆனந்த், அந்தக் கட்சியின் தலைவா் விஜய்யின் சுற்றுப்பயணக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்.6-ஆம் தேதி திருச்சி சென்றாா். அப்போது, திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகா் கோயிலில் வழிபாடு நடத்தினாா். இதனால், அந்தப் பகுதியில் ஏராளமான தவெக தொண்டா்கள் திரண்டனா். அப்போது, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் அப்புறப்படுத்தக் கோரினா். அதைக் கேட்காமல், தவெக தொண்டா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட தவெக செயலா் கரிகாலன் ஆகியோா் மீது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆனந்த் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து, விசாரணையை ஒத்திவைத்தாா்.