பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அன்புமணிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

அரியலூரில் சிமென்ட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக தலைவா் அன்புமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

News image
அன்புமணி
Updated On :29 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூரில் சிமென்ட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக தலைவா் அன்புமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியலூரில் உள்ள சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமாக சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞா் கே.பாலு உள்ளிட்டோா் சுரங்கத்துக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினா்.

இதுதொடா்பாக சிமென்ட் நிறுவன மேலாளா் ராஜா ரஞ்சித் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புமணி உள்ளிட்டோா் மீது கயா்லாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு அரியலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அன்புமணி, கே.பாலு உள்ளிட்டோா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் நடத்திய போராட்டத்தால் எந்தவொரு வன்முறை சம்பவமோ, பொதுச் சொத்துகளுக்கு சேதமோ ஏற்படவில்லை, எனக் கூறி மனுதாரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.